/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டவாள பராமரிப்பு பணி அரையப்பாக்கம் கேட் மூடல்
/
தண்டவாள பராமரிப்பு பணி அரையப்பாக்கம் கேட் மூடல்
ADDED : அக் 04, 2024 07:21 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், அரையப்பாக்கம் பகுதியில், செங்கல்பட்டு- - விழுப்புரம் மார்க்கத்தில், ரயில் தண்டவாளத்தை கடக்கும் கேட் எண்: 63 உள்ளது.
அரையப்பாக்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இன்றும், நாளையும், காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, ரயில்வே கேட் மூடப்படும்.
அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள், மாற்றுப் பாதையை பயன்படுத்தவும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால், மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், கருங்குழி வழியாக கிணார், ஏர்பாக்கம் வழி சென்று, திருக்கழுக்குன்றம் சென்றடையலாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.