/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : மே 14, 2025 12:47 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, 25 கி.மீ., சாலை துாரம் உடையது. இது, ஆறு வழி மாநில நெடுஞ்சாலையாக, 2014ல் அகலப்படுத்தப்பட்டது.
இந்த சாலையில் தினமும் 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் மழைநீர் தேங்காமல் வெளியேற தடங்கள் அமைக்கப்பட்டன.
இந்த வழிகளில், பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை சிங்கபெருமாள் கோவில், கொளத்துார், ஆப்பூர், திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் மழைநீர் சாலையிலேயே தேங்கி, அதிலிருந்த குப்பை சாலையில் பரவியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறினர்.
வேகமாக வாகனங்கள் செல்லும் போது, சக வாகன ஓட்டிகள் மீது சேற்று நீர் பட்டு சிரமப்பட்டனர். எனவே, சாலையில் உள்ள குப்பை மற்றும் மண் திட்டுகளை அகற்றி, மழைநீர் செல்ல வழி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.