/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழந்தைகள் இல்லங்கள் பதிவு கட்டாயம்
/
குழந்தைகள் இல்லங்கள் பதிவு கட்டாயம்
ADDED : ஜன 24, 2024 09:02 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் குழந்தை இல்லங்களை பதிவு செய்வது கட்டாயம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து குழந்தைகள் இல்லங்களும், இளைஞர் நீதிச்சட்டம் 2015 பிரிவு 41ன்படி, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் பதிவு செய்து இயங்க வேண்டும்.
புதிதாக பதிவு செய்ய வேண்டுமென்றால், செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை தொடர்பு கொள்ளலாம். பதிவு செய்யாமல் இயங்கும் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கு, இளைஞர் நீதிச்சட்டம் 2015 பிரிவு 42ன்படி, ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ௧ லட்சம் ரூபாய்க்கு குறையாமல் அபராதமும் விதிக்கப்படும்.
பதிவு செய்யாமல் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள் தொடர்பான தகவல்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் dcpucpt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 63826 12846 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.