/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புயல் பாதித்த பகுதிக்கு நிவாரண பொருட்கள்
/
புயல் பாதித்த பகுதிக்கு நிவாரண பொருட்கள்
ADDED : டிச 05, 2024 11:13 PM
திருப்போரூர்,
'பெஞ்சல்' புயலால் வெள்ள பாதிப்பிற்கு உள்ளான கடலுார், விழுப்புரம் மாவட்டங்களுக்கு, திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் சார்பில் நேற்று, நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்திலிருந்து நிவாரண பொருள் ஏற்றப்பட்ட வாகன பயணத்தை, ஒன்றியக் குழு தலைவர் இதயவர்மன் துவக்கி வைத்தார். இதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மஞ்சள் உள்ளிட்ட பலவகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பால் பவுடர் மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், போர்வை, பிஸ்கெட் பாக்கெட், கொசு வலை, தார்ப்பாய் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்கள் என, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, மூன்று லாரிகளில் ஏற்றி வைத்திருந்தனர். இதை, கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி ஆகியோர், நேற்று அனுப்பினர்.