/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.13.72 லட்சம் மதிப்பில் சிமென்ட் கிடங்கு புதுப்பிப்பு
/
ரூ.13.72 லட்சம் மதிப்பில் சிமென்ட் கிடங்கு புதுப்பிப்பு
ரூ.13.72 லட்சம் மதிப்பில் சிமென்ட் கிடங்கு புதுப்பிப்பு
ரூ.13.72 லட்சம் மதிப்பில் சிமென்ட் கிடங்கு புதுப்பிப்பு
ADDED : நவ 19, 2024 06:38 PM
திருப்போரூர்:திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், சிமென்ட் கிடங்கு கட்டடங்கள் உள்ளன. இதில், நுாற்றுக்கணக்கான சிமென்ட் மூட்டைகள் பாதுகாக்கப்பட்டு, அரசின் திட்டப் பணிகளுக்கும், பயனாளிகளுக்கும் வினியோகிக்கப்படுகின்றன.
இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலுள்ள அலுவலர்கள் நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடங்கள் பழுதடைந்து இருந்தன. இதனால், மழை நேரத்தில் சிமென்ட் மூட்டைகளை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
எனவே, இந்த கட்டடங்களை புதுப்பிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் சார்பில், ஒன்றிய பொது நிதியின் கீழ், 13.72 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு சிமென்ட் கிடங்கு கட்டடங்கள் சீரமைத்து புதுப்பிக்கப்பட்டன.