செய்யூர் சந்தை பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை
செய்யூர் சந்தை பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை
UPDATED : நவ 15, 2026 05:00 PM
ADDED : நவ 15, 2026 05:00 PM
செய்யூர்: செய்யூர் சந்தை பகுதியில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் பஜார் பகுதியில் வன்மீகநாதர் கோவிலுக்கு சொந்தமான 46 சென்ட் நிலத்தில் வாரந்தோறும் சந்தை செயல்பட்டு வருகிறது.
சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியபாரிகள் காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகளை இங்கு விற்பனை செய்து வருகின்றனர்.
வாரந்தோறும் வியாழக்கிழை அன்று நடக்கும் சந்தையில், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் வியாபாரிகளிடம் 100 ரூபாய் வாடகை வசூல் செய்து வருகின்றனர்.
ஆனால் சந்தை நடக்கும் பகுதியில், காய்கறி கடைகள் நடத்துவதற்கான கூடங்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. தவிர கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சந்தைகளில் காய்கறி கழிவுகள் மற்றும் பழக்கழிவுகள் குப்பை போல் குவிந்து கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்கள் முகம் சுழித்தபடி செல்கின்றனர். எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்து, வார சந்தையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
