UPDATED : அக் 27, 2026 05:29 PM
ADDED : அக் 27, 2026 05:24 PM

அ நிறம் | அளவு
செய்யூர்: செய்யூரில் நெடுஞ்சாலை ஓரத்தில், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை, வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி எதிரே மாநில நெடுசாலையோரத்தில் மின்மாற்றி உள்ளது. அதன் அருகிலேயே குடியிருப்புகளும் உள்ளன. சாலையோரத்தில் மின்மாற்றியால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, நெடுஞ்சாலையோரம் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
