/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்வாய் துார்வாரிய மண்ணை அப்புறப்படுத்த வேண்டுகோள்
/
கால்வாய் துார்வாரிய மண்ணை அப்புறப்படுத்த வேண்டுகோள்
கால்வாய் துார்வாரிய மண்ணை அப்புறப்படுத்த வேண்டுகோள்
கால்வாய் துார்வாரிய மண்ணை அப்புறப்படுத்த வேண்டுகோள்
ADDED : அக் 18, 2024 01:29 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதியில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து சிப்காட் செல்லும் முத்துராமலிங்கத்தேவர் சாலையின் ஓரம் இருந்த மழைநீர் கால்வாய் முழுதும், மண் நிரம்பிய வெள்ள நீர் வெளியேற வழியின்றி காணப்பட்டது.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, நகராட்சி சார்பில் கடந்த வாரம் இந்த பகுதியில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக கால்வாய் துார்வாரப்பட்டது.
கால்வாயின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட மண், கால்வாயின் அருகிலேயே கொட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, மீண்டும் கால்வாயில் மண் மூடி துார்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் இருந்த மழைநீர் கால்வாய் துார்ந்து கழிவுநீர் கால்வாயாக மாறியது. சாலையில் கழிவு நீர் வழிந்தோடியதையடுத்து, கடந்த வாரம் கால்வாய் துார்வாரப்பட்டது.
இந்த கழிவு மண் அப்புறப்படுத்தப்படாமல், கால்வாயின் அருகிலேயே கொட்டப்பட்டு உள்ளால், மழை பெய்யும் போது மீண்டும் மண் கரைந்து கால்வாயில் சென்றடையும். எனவே, இந்த கழிவு மண்ணை அகற்றி அப்புறப்படுத்த, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.