/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளே வந்து செல்ல கோரிக்கை
/
அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளே வந்து செல்ல கோரிக்கை
அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளே வந்து செல்ல கோரிக்கை
அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளே வந்து செல்ல கோரிக்கை
ADDED : பிப் 12, 2025 08:42 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளே அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என, அப்பகுதி பயணியர் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், கூடுவாஞ்சேரி நகராட்சி முக்கிய பகுதியாக உள்ளது. இங்கிருந்து தினமும் 10, 000க்கும் மேற்பட்டோர் வெளி இடங்களுக்கு அரசு பேருந்தில் பயணிக்கின்றனர்.
இதற்காக, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு, தாம்பரம், குரோம்பேட்டை வடபழனி ஆகிய இடங்களுக்கு நேரிடையாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் வந்து, நின்று, பின் புறப்பட்டுச் செல்ல கூடுவாஞ்சேரியில் தனியாக பேருந்து நிலையம் செயல்படுகிறது.
அதே வேளையில், தாம்பரம் முதல் செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம் வரை இயக்கப்படும் பேருந்துகள், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளே வருவதில்லை.
இதனால், பெரும்பாலான பயணியர், பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்தில் ஏறாமல், பேருந்து நிழற்குடை இல்லாத ஜி.எஸ்.டி., சாலையில் கால் வலிக்க நின்று, பேருந்தில் ஏறுகின்றனர்.
பயணியர் கூறியதாவது:
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம், ஜி.எஸ்.டி., சாலை ஓரம்தான் உள்ளது. எனவே, தாம்பரம் உள்ளிட்ட பிற இடங்களிலிருந்து கூடுவாஞ்சேரி வழியாக செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளே வர வேண்டும்.
பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். மாறாக, ஜி.எஸ்.டி., சாலையில் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என, போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து குழறுபடி, நெரிசல் தீரும். தவிர, விபத்துகள் ஏற்படுவதையும் தடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

