/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 26, 2025 01:26 AM

அச்சிறுபாக்கம்,:திருமுக்காடு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், திருமுக்காடு ஊராட்சியில், திருமுக்காடு - அச்சிறுபாக்கம் சாலை அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது.
இந்த மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது.
மேலும், மையத்தின் பின்புறம் ஏரி நீர் பிடிப்பு பகுதியில், நீர் நிரம்பி உள்ளது.
அங்கன்வாடி மையத்தை சுற்றி ஏரி நீர் பிடிப்பு மற்றும் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளால், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகள் நலன் கருதி, மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.