/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கச்சூர் குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
/
திருக்கச்சூர் குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
திருக்கச்சூர் குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
திருக்கச்சூர் குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 17, 2025 01:33 AM

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி, 19வது வார்டு திருக்கச்சூர் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் பழமையான தியாகராஜர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் மாத பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவிலின் வலது புறத்தில் பழமையான குளம் உள்ளது.
இந்த குளம் பாழடைந்து பாசி படிந்தும், குப்பை நிறைந்தும் காணப்படுகிறது.
மேலும் நான்கு பக்க குளத்தில், இரண்டு பக்கம் மட்டுமே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு பக்கம் திறந்த நிலையில் உள்ளதால், குழந்தைகள் குளத்தின் அருகில் சென்று விளையாடும் அபாய நிலை உள்ளது. இதனால், குளத்தைச் சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த குளத்தின் அருகில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். குளத்தை சுற்றி தடுப்பு வேலி இல்லாததால், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் குளத்தின் அருகில் விளையாடுகின்றனர்.
கால்நடைகளும் குளத்தைச் சுற்றி வருகின்றன.
இதன் காரணமாக குளத்தில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
சமீபத்தில் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலுார் பகுதியில், 8 வயது சிறுவன் குடியிருப்புகளுக்கு இடையே இருந்த குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
அதுபோல சம்பவம் ஏதும் நடைபெறும் முன், இந்த குளத்தை சுத்தம் செய்து, சுற்றி தடுப்புச் சுவர் அல்லது தடுப்பு வேலி அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.