/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் மாணவர் விடுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க கோரிக்கை
/
அச்சிறுபாக்கம் மாணவர் விடுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க கோரிக்கை
அச்சிறுபாக்கம் மாணவர் விடுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க கோரிக்கை
அச்சிறுபாக்கம் மாணவர் விடுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2025 01:25 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
அச்சிறுபாக்கம் மார்வர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் பயன்பெறும் வகையில், 2013ல் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
தற்போது, இந்த கல்வியாண்டில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ளனர்.
மாணவர் விடுதியில், கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல், பற்றாக்குறை நிலவி வருகிறது.
எனவே, மாணவர்களின் நலன் கருதி, மதுராந்தகம் தனி வட்டாட்சியர், மாணவர் விடுதியில் ஆய்வு செய்து, தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், ஆழ்துளை கிணறு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.