/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விளாங்காடு அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக கட்டடம் அமைக்க கோரிக்கை
/
விளாங்காடு அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக கட்டடம் அமைக்க கோரிக்கை
விளாங்காடு அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக கட்டடம் அமைக்க கோரிக்கை
விளாங்காடு அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக கட்டடம் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 02, 2024 01:54 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, விளாங்காடு ஊராட்சி உள்ளது. இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். தற்போது, கட்டடம் சீரமைக்கப்படாமல் பழமையானதால், கட்டடத்தின் உள்பகுதியில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, கீழே விழுகிறது. மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்படுகிறது.
இந்த மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு, கழிப்பறை வசதி அமைக்கப்படவில்லை. இதனால், மையத்திற்கு வெளியே, திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
சாலையோரம் அங்கன்வாடி மையம் உள்ளதால், குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
புதிதாக அங்கன்வாடி மையக் கட்டடம் அமைக்க வேண்டி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, தற்காலிகமாக மாற்று கட்டடத்திற்கு அங்கன்வாடி மையத்தை மாற்றி, போதிய வசதிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
தொடர்ந்து, புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்து தர, மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி மையக் குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.