/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் பி.டி.ஓ., - தாலுகா அலுவலகம் இடையே வழி அமைக்க ேவண்டுகோள்
/
திருப்போரூர் பி.டி.ஓ., - தாலுகா அலுவலகம் இடையே வழி அமைக்க ேவண்டுகோள்
திருப்போரூர் பி.டி.ஓ., - தாலுகா அலுவலகம் இடையே வழி அமைக்க ேவண்டுகோள்
திருப்போரூர் பி.டி.ஓ., - தாலுகா அலுவலகம் இடையே வழி அமைக்க ேவண்டுகோள்
ADDED : நவ 21, 2025 03:13 AM

திருப்போரூர்: திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகம் இடையே வழி அமைக்க வேண்டுமென, மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், பொதுப்பணித் துறை அலுவலகம், வட்டார கல்வி வள மையம், சிமென்ட் கிடங்கு ஆகியவை அமைந்துள்ளன.
இந்த அலுவலக வளாகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, செங்கல்பட்டு சாலையில் இரண்டு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த பி.டி.ஓ., அலுவலகத்தை ஒட்டி, திருப்போரூர் தாலுகா அலுவலகம் உள்ளது. மேற்கண்ட இரண்டு அலுவலகங்களுக்கும், அதிகமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
இந்த இரண்டு அலுவலகத்திற்கும் இடையே சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால், ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்குச் செல்ல, 500 மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் முதியோர், பெண்கள் அவதிப்பட்டு வரு கின்றனர். பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வருவோர், தாலுகா அலுவலகம் செல்ல செங்கல்பட்டு சாலை, மேட்டுத்தண்டலம் பிரதான சாலைக்குச் சென்று, தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும்.
எனவே, மக்கள் நலன் கருதி, திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு இடையே வழி அமைக்க வேண்டும் என, மக்கள் ேவண்டுகோள்விடுத்துள்ளனர்.

