/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொத்தேரி ஏரிக்கரை சாலையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை
/
பொத்தேரி ஏரிக்கரை சாலையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை
பொத்தேரி ஏரிக்கரை சாலையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை
பொத்தேரி ஏரிக்கரை சாலையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை
ADDED : அக் 11, 2024 12:50 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பொத்தேரி ஏரிக்கரை சாலை, 2 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலையை, கிழக்கு பொத்தேரி, வல்லாஞ்சேரி உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி, மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை, பல ஆண்டுகளாக மண் மற்றும் ஜல்லிக்கற்களால் ஆன சாலையாக இருந்து வருகிறது. தற்போது, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் செல்லும் போது புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும், இந்த சாலையை கடக்கும் போது அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, இந்த சாலையை தார் சாலையாக மாற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.