/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரியபுத்தேரி குளக்கரை சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
/
பெரியபுத்தேரி குளக்கரை சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
பெரியபுத்தேரி குளக்கரை சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
பெரியபுத்தேரி குளக்கரை சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : டிச 26, 2025 05:40 AM

சிங்கபெருமாள் கோவில்: செங்கல்பட்டு அடுத்த சென்னேரி குளக்கரை அருகில் சாலை ஓரம் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுமந்தபுரம் - சென்னேரி சாலை 4 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையை பயன்படுத்தி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில்,பெரியபுத்தேரி சாலை வளைவில் அம்மன் கோவில் குளம் உள்ளது.
இந்த குளத்தின் கரையை ஒட்டி சாலை உள்ளதால் வாகன ஓட்டிகள் வேகமாக வரும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இந்த பகுதியில் குளத்திற்கும் சாலைக்கும் இடையே இரும்பு தடுப்புகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டு மென என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.