ADDED : நவ 10, 2025 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: அகரம் தாங்கள் பகுதியில், தார் சாலை அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்போரூர் ஒன்றியம், மானாமதி ஊராட்சிக்குட்பட்ட அகரம் தாங்கள் கிராம், நேதாஜி தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள தெரு சாலைகள், மண் சாலையாக உள்ளது. மழை நேரத்தில் சாலை சகதியாக மாறுகிறது.
அதில், வாகனங்களை இயக்க முடியாமலும், நடக்க முடியாமலும் மக்கள் தடுமாறி வருகின்றனர்.
புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

