/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடையில் நிழற்கூரை அமைக்க கோரிக்கை
/
ரேஷன் கடையில் நிழற்கூரை அமைக்க கோரிக்கை
ADDED : செப் 30, 2024 04:36 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி, குண்டூர் பகுதியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், ரேஷன் கடை, வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இங்கு, இட நெருக்கடியில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின், ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் நகரவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், 2022- - 23ம் நிதியாண்டில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், ரேஷன் கடை கட்டடம் கட்ட, 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பின், அண்ணா நகர் பகுதியில், புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இந்த கடையின் முன் பகுதியில், பயனாளிகள் நலன் கருதி, நிழற்கூரை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.