/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் குளத்தில் முதியவர் சடலம் மீட்பு
/
கோவில் குளத்தில் முதியவர் சடலம் மீட்பு
ADDED : ஜன 12, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோவில் தெப்பக்குளம் உள்ளது.
இந்த குளத்தில், ஆண் உடல் மிதப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், குளத்தில் கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து, இறந்த நபர் யார், தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணங்களில், விசாரணை நடத்தி வருகின்றனர்.