/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழிற்சாலை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கருநிலம்வாசிகள் அவதி
/
தொழிற்சாலை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கருநிலம்வாசிகள் அவதி
தொழிற்சாலை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கருநிலம்வாசிகள் அவதி
தொழிற்சாலை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கருநிலம்வாசிகள் அவதி
ADDED : நவ 27, 2024 12:29 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராம மக்கள் விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த தனி நபர் ஒருவர், அருகில் உள்ள மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பையை எரித்து வருதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டி உள்ள காலி இடத்தில், குப்பை கழிவுகள் எரிக்கப்படுகின்றன.
தனி நபர் ஒருவர், தினமும் நான்கு லாரிகளில் குப்பையை கொண்டு வந்து கொட்டி தீயிட்டு எரித்து வருகிறார். இதனால், இந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்து, கிராம மக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இந்த குப்பையை கால்நடைகள் உட்கொள்வதால், அவற்றிற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம், குடியிருப்புகளுக்கு மத்தியில் குப்பை கொட்டி எரிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.