/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேம்பாலத்தில் வளரும் மரங்களால் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம்
/
மேம்பாலத்தில் வளரும் மரங்களால் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம்
மேம்பாலத்தில் வளரும் மரங்களால் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம்
மேம்பாலத்தில் வளரும் மரங்களால் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம்
ADDED : மார் 04, 2024 06:38 AM

அச்சிறுபாக்கம், : அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடு பகுதியில், விழுப்புரம்- - தாம்பரம் மார்க்கத்தில், ரயில்வே தண்டவாளம் உள்ளது.
இங்கு, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை தண்டவாளத்தை கடப்பதால், இப்பகுதியில் ரயில்வே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது.
இந்த உயர்மட்ட பாலத்தின் இணைப்பு பகுதிகளில், மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால், உயர்மட்ட பாலத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்து வரும் மரங்களை வேருடன் அகற்றாமல், அவற்றின் கிளைகளை மட்டுமே வெட்டி அப்புறப்படுத்தி செல்கின்றனர். இதனால், மரத்தின் வேர் பகுதி பலம் பெற்று, மீண்டும் வளர்கின்றன.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்துள்ள மரங்களை வேருடன் அப்புறப்படுத்தி, மாற்று இடத்தில் நடவு செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.