/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் குழாய் அருகே வழிந்தோடும் கழிவு நீரால் தொற்றுநோய் அபாயம்
/
குடிநீர் குழாய் அருகே வழிந்தோடும் கழிவு நீரால் தொற்றுநோய் அபாயம்
குடிநீர் குழாய் அருகே வழிந்தோடும் கழிவு நீரால் தொற்றுநோய் அபாயம்
குடிநீர் குழாய் அருகே வழிந்தோடும் கழிவு நீரால் தொற்றுநோய் அபாயம்
ADDED : நவ 04, 2024 02:53 AM

செய்யூர்:செய்யூர் அருகே உள்ள சீக்கினாங்குப்பம் ஊராட்சியில், 700க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட சீக்கினாங்குப்பம் காலனி பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலை ஓரத்தில் தேங்கி நிற்கிறது. அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களின் அருகே கழிவு நீர் வழிந்து ஓடுவதால், குடிநீருடன் கழிவுநீர் கலந்து, அப்பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி, குடிநீர் குழாய்களை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.