/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவு நீர் கால்வாயில் குப்பை நோய் தொற்று பரவும் அபாயம்
/
கழிவு நீர் கால்வாயில் குப்பை நோய் தொற்று பரவும் அபாயம்
கழிவு நீர் கால்வாயில் குப்பை நோய் தொற்று பரவும் அபாயம்
கழிவு நீர் கால்வாயில் குப்பை நோய் தொற்று பரவும் அபாயம்
ADDED : டிச 17, 2024 12:26 AM

மறைமலை நகர், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அழகேசன் நகர், பழைய ஜி.எஸ்.டி., சாலை ஓரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் செல்கின்றன.
இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழைநீர் கால்வாயில் கலந்து நேரடியாக கொள்வாய் ஏரியில் கலக்கிறது.
இந்த கால்வாய்களின் மேற்பரப்பு பல இடங்களில் மூடப்படாமல் உள்ளதால் கால்வாய் முழுதும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் நிறைந்து தண்ணீர் வெளியேற முடியாமல் கால்வாயில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் அடைத்து கழிவு நீர் தேங்கி கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கால்வாய்களில் தேங்கும் கழிவு நீரை அகற்ற செங்கல்பட்டு நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.