/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடியிருப்புக்கு மத்தியில் குப்பை எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
/
குடியிருப்புக்கு மத்தியில் குப்பை எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
குடியிருப்புக்கு மத்தியில் குப்பை எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
குடியிருப்புக்கு மத்தியில் குப்பை எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
ADDED : ஜன 06, 2025 02:29 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட, பல்வேறு பகுதிகளில் இருந்து,
தூய்மை பணியாளர்கள் வாயிலாக, சேகரிக்கப்படும் குப்பைகளை, ஊராட்சிக்கு உட்பட்ட, ஆலப்பாக்கம் புத்துார் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலி இடத்தில் குப்பை தேக்கி வைக்கப்படுகிறது.
பின் அங்கிருந்து குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைத்து வருவது வழக்கம்.
இந்நிலையில் தேக்கி வைத்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதன் காரணமாக இப்பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி , இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு, வருகின்றனர். என, அப்பகுதிவாசிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கிளாம்பாக்கம் போலீசார் மற்றும் ஊராட்சி தலைவி வனிதா உள்ளிட்டவர்கள் நேரில் சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர் .
ஊராட்சி தலைவி குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர் .

