/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இயலாக் குழந்தைகள் கல்வி கற்க ரூ.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
/
இயலாக் குழந்தைகள் கல்வி கற்க ரூ.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
இயலாக் குழந்தைகள் கல்வி கற்க ரூ.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
இயலாக் குழந்தைகள் கல்வி கற்க ரூ.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
ADDED : ஏப் 26, 2025 07:20 PM
செங்கல்பட்டு:இயலாக் குழந்தைகளுக்கு கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் சிகிச்சை தொடர்பான கருவிகள் வாங்க, கனிவள நிதி, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மாதாந்திர கல்வித்தர ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் அங்கயர்கண்ணி, பாஸ்கரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவக்குமார் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், இயலாக் குழுந்தைகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி, கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் சிகிச்சை தொடர்பாக கருவிகள் வழங்க, கனிம வள நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கலெக்டர் உத்தரவிட்டார்.
ஊரக வளர்ச்சித்துறையினர், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, சமூக பொறுப்பு நிதியின் கீழ், 50 பள்ளிகளில் மாணவியருக்கான கழிப்பறை கட்டித்தர உறுதி அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 16 நடுநிலை பள்ளிகளுக்கு, 'நாப்கின்' எரியூட்டும் கருவி வாங்கித் தர, முன்னோடி வங்கி மேலாளர் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி, ஆதார் எண் வழங்க முடிவு செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.