/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.30 கோடி சுற்றுலா மேம்பாடு மாமல்லையில் கலெக்டர் ஆய்வு
/
ரூ.30 கோடி சுற்றுலா மேம்பாடு மாமல்லையில் கலெக்டர் ஆய்வு
ரூ.30 கோடி சுற்றுலா மேம்பாடு மாமல்லையில் கலெக்டர் ஆய்வு
ரூ.30 கோடி சுற்றுலா மேம்பாடு மாமல்லையில் கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 02, 2024 10:29 PM

மாமல்லபுரம்,:மாமல்லபுரத்தில், பல்லவர் கால பாரம்பரிய நினைவுச் சின்னங்களில், கடற்கரை கோவில் குறிப்பிடத்தக்கது. கோவில் வளாக சுற்றுப்புற பகுதியை, சர்வதேச தரத்தில் மேம்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அதற்காக, 'சுவதேஷ் தர்ஷன் 2.0' திட்டத்தில், மாமல்லபுரத்தின் வசதிகளை மேம்படுத்த, 30 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேம்பாட்டு திட்டம்செயல்படுத்தப்படும் கோவில் பகுதியில், கலெக்டர் அருண்ராஜ், நேற்று ஆய்வு செய்தார்.
சுற்றுலா துறை அலுவலர் சக்திவேல், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட உள்ள வசதிகள் குறித்து, கலெக்டரிடம் விளக்கினார்.
இதில், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சுற்றுலாத் துறை, பல்லவர் சிற்பக்கலைகள் குறித்த ஒளி - ஒலி காட்சி திட்டத்தை, அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி வளாகத்தில், 2 ஏக்கரில் செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்திற்காக, கல்லுாரி இடத்தை பெற, முதல்வர் ராமன் மற்றும் சுற்றுலா அலுவலர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து, சிற்பக் கலைகள் பயிற்றுவிப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

