/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விழாக்கால சிற்றுண்டி விடுதி மாமல்லையில் விற்பனை ஜோர்
/
விழாக்கால சிற்றுண்டி விடுதி மாமல்லையில் விற்பனை ஜோர்
விழாக்கால சிற்றுண்டி விடுதி மாமல்லையில் விற்பனை ஜோர்
விழாக்கால சிற்றுண்டி விடுதி மாமல்லையில் விற்பனை ஜோர்
ADDED : டிச 30, 2024 02:18 AM

மாமல்லபுரம்:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ், மாமல்லபுரத்தில் கடற்கரை விடுதி இயங்குகிறது. விடுதி நிர்வாகம், இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்திய நாட்டிய விழாவின் போது, விழாக்கால சிற்றுண்டி விடுதியை, பல ஆண்டுகளாக நடத்துகிறது.
கடந்த டிச., 22ம் தேதி, கடற்கரை கோவில் அருகில் விழா துவக்கப்பட்டது. வரும் ஜன., 20ம் தேதி வரை விழா நடக்கிறது.
தினசரி மாலை 6:00 மணி முதல், இரவு 8:00 வரை பாரம்பரிய நாட்டியங்கள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் என நடக்கின்றன. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையாக உள்ளதால், பயணியர் குவிந்து, கலை நிகழ்ச்சிகளை ரசிக்கின்றனர். இச்சூழலில் விடுதி நிர்வாகம், அதன் கூடுதல் வருவாய் கருதி, தற்போதும் 'குவிக் பைட்' என்ற பெயரில், சிற்றுண்டி விடுதி நடத்துகிறது.
தோசை உள்ளிட்ட சிற்றுண்டி உணவு வகைகள், சமோசா உள்ளிட்ட தின்பண்டங்கள், தேனீர் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது. தற்போது விற்பனை களைகட்டுகிறது.

