/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுாரில் துாய்மை சேவை விழிப்புணர்வு பேரணி
/
மதுாரில் துாய்மை சேவை விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 02, 2024 01:50 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மதுார் ஊராட்சியில், துாய்மை சேவை விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. துாய்மை பாரத திட்டம் சார்பில், துாய்மை சேவை -- 2024 விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்வில், ஊராட்சி தலைவர் தங்கம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர் ரேவதி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சுகாதாரத் துாய்மை குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின், ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்தனர். தொடர்ந்து, துாய்மை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊராட்சியின் முக்கிய வீதிகளில் பேரணி சென்றனர்.