/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வனத்துறை பண்ணையில் மரக்கன்று உற்பத்தி பணி தீவிரம்
/
வனத்துறை பண்ணையில் மரக்கன்று உற்பத்தி பணி தீவிரம்
ADDED : ஆக 02, 2025 11:36 PM

திருப்போரூர்:திருப்போரூர் வனசரக அலுவலக வளாக நாற்றங்கால் பண்ணையில் பலவகை மரக்கன்றுகள் வளர்ப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், 50 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், குளம் வெட்டுதல், மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து பலவகை செடிகளை உற்பத்தி செய்வதற்கு முடிவு செய்தது.
அதன்படி, திருப்போரூர் வனச்சர அலுவலக வளாகத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 3,000 நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அங்கு பாதாம், வாகை, பூவரசு உள்ளிட்ட செடிகள் உற்பத்தி செய்யும் பணியில், வனத்துறை ஆலோசனையுடன் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இயற்கை சூழலை அதிகரிக்கும் வகையில் தேவைப்படும் இடங்களில் இச்செடிகளை எடுத்து சென்று நடவு செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், வனத்துறை சார்பில் நாவல், நெல்லி, புளி, தேக்கு உள்ளிட்ட 10,000 செடிகள், உற்பத்தி செய்யும் பணியில், வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இச்செடிகளை பாதுகாப்பான பொது இடங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகளில் நடவு செய்யப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.