/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிதாக சாலை அமைக்க கோரி நாற்று நட்டு நூதன போராட்டம்
/
புதிதாக சாலை அமைக்க கோரி நாற்று நட்டு நூதன போராட்டம்
புதிதாக சாலை அமைக்க கோரி நாற்று நட்டு நூதன போராட்டம்
புதிதாக சாலை அமைக்க கோரி நாற்று நட்டு நூதன போராட்டம்
ADDED : அக் 20, 2024 12:29 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, வெள்ளப்புத்துார் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கள்ளங்கொள்ளை, அருந்ததி பாளையம், இருளர் காலனி, பாலக்காடு, பாண்டிமேடு, சொக்கங்கொள்ளை, மேட்டு தெரு, குளக்கரை காலனி உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன.
வெள்ளப்புத்துாரில் இருந்து பாப்பநல்லுார் வழியாக உத்திரமேரூர், காஞ்சிபுரம் செல்லும் சாலை உள்ளது. வெள்ளப்புத்துார் ஊராட்சி பகுதியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளாக சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. இதன் காரணமாக, மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
ஆட்டோ, ஆம்புலன்ஸ், அரசு பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சாலையை சீரமைத்து தரக் கோரி, மூன்று ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாற்று நடும் போராட்டம்
தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேரும், சகதியுமாக மாறியுள்ளது.
இதன் காரணமாக, நேற்று மதுராந்தகத்தில் இருந்து வெள்ளைப்புத்துார் செல்லும் தடம் எண்: டி17 என்ற அரசு பேருந்தை மறித்து, 200க்கும் மேற்பட்ட கிராம வாசிகள், சாலையில் உள்ள பள்ளங்களில், நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர். பின், அவர்கள் கலைந்து சென்றனர்.