ADDED : பிப் 17, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 16 வயது சிறுமிக்கு, மருத்துவம், படிப்பு மற்றும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக, கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து, 50,000 ரூபாய் உதவித்தொகையை, கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் வழங்கினார்.
மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு, அரசு மூலம் குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.