/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி மாணவர் துாக்கிட்டு தற்கொலை
/
பள்ளி மாணவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜன 08, 2025 07:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சஞ்ஜித்,16. இவர், பெருமாட்டுநல்லுாரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
வீட்டுப்பாடம் சரியாக எழுதவில்லை என, சண்முகத்திடம் பள்ளி ஆசிரியர் கூறியதாக தெரிகிறது.
இதனால் சண்முகம், மகனை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த சஞ்ஜித், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டு வந்து, தன் அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

