/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல் குவாரியில் வெடி வைப்பதால் பள்ளி மாணவ- - மாணவியர் பீதி
/
கல் குவாரியில் வெடி வைப்பதால் பள்ளி மாணவ- - மாணவியர் பீதி
கல் குவாரியில் வெடி வைப்பதால் பள்ளி மாணவ- - மாணவியர் பீதி
கல் குவாரியில் வெடி வைப்பதால் பள்ளி மாணவ- - மாணவியர் பீதி
ADDED : நவ 20, 2024 10:06 PM
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில், அரசினர் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஆறு முதல் பிளஸ் 2 வரை, 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளியின் பின்புறத்தில், 400 மீட்டர் தொலைவில், தனியார் கல் குவாரி, கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
பகல் நேரத்தில், கல் குவாரியில் பாறைகளை தகர்க்க வெடி வைக்கப்படுவதால், வெடி சத்தத்தால் பள்ளி மாணவ- - மாணவியர் பீதியடைகின்றனர்.
இதனால், கவன சிதறல் ஏற்பட்டு, படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி நேரத்தில் கல் குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.