/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாரண, சாரணியர் விருது ஆலத்துாரில் தேர்வு முகாம்
/
சாரண, சாரணியர் விருது ஆலத்துாரில் தேர்வு முகாம்
ADDED : ஏப் 26, 2025 07:21 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துார் ஓ.எம்.ஆர்., சாலையையொட்டி, பாரத சாரண,- சாரணியர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மாநில பயிற்சி மையம், 1993ல் ஏற்படுத்தப்பட்டது.
இங்கு, பல மாவட்டங்களிலிருந்து சாரண,- சாரணிய மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த பயிற்சித் திடலில், புனிததோமையார்மலை மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில், ராஜபுரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம், கடந்த 25ம் தேதி துவங்கி இன்று 27ம் தேதி வரை நடக்கிறது.
ராஜபுரஸ்கார் தேர்வில் கூடாரம் அமைத்தல், முதல் உதவி முடிச்சுகள், சாரண இயக்கம் பற்றி வினா -- விடைகள் கொடிப்பாடல், இறை வணக்கம், உறுதி மொழிகள், சாரண விதிகள் ஆகியவை பற்றி தேர்வு முகாமில் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் பின்னர் வெளியிடப்படும்.
இதில், சென்னை கீழ்க்கட்டளையில் இயங்கி வரும் ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட, 30 பள்ளிகளைச் சேர்ந்த சாரண, சாரணியர் 400 பேர் பங்கேற்றனர்.