/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வர்த்தக உரிமம் பெறாத 11 கடைகளுக்கு 'சீல்'
/
வர்த்தக உரிமம் பெறாத 11 கடைகளுக்கு 'சீல்'
ADDED : பிப் 18, 2025 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கரணை : பெருங்குடி மண்டலம், 190வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்கரணை, தாம்பரம்- - வேளச்சேரி சாலையில், 'புட் கோர்ட்' இயங்கி வருகிறது.
அதில், பாஸ்ட்புட், காபி ஷாப், பிரியாணி கடைகள் உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகள் உள்ளன. அவற்றில், 11 கடைகள் ஓராண்டிற்கு மேலாக வரி செலுத்தவில்லை. முறையாக வர்த்தக உரிமமும் பெறவில்லை.
இதையடுத்து, மண்டல வருவாய்த் துறை சார்பில், கடந்த மாதம் முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அதை கடை உரிமையாளர்கள் உதாசீனப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மண்டல வருவாய்த்துறை அலுவலர் திருமால் தலைமையிலான ஊழியர்கள், 11 கடைகளுக்கு நேற்று 'சீல்' வைத்தனர்.

