/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோடரியால் வாலிபர் வெட்டி கொலை தாயின் இரண்டாவது கணவர் கைது
/
கோடரியால் வாலிபர் வெட்டி கொலை தாயின் இரண்டாவது கணவர் கைது
கோடரியால் வாலிபர் வெட்டி கொலை தாயின் இரண்டாவது கணவர் கைது
கோடரியால் வாலிபர் வெட்டி கொலை தாயின் இரண்டாவது கணவர் கைது
ADDED : அக் 22, 2024 07:50 AM

மதுராந்தகம் : மதுராந்தகம் அடுத்த அருணாகுளம் கிராமம், திரு.வி.க., நகர் பகுதியை சேர்நதவர் சரசு, 60. இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர்.
இவரின் முதல் கணவர் இறந்து விட்டதால், 20 ஆண்டுகளுக்கு முன், கோபால், 70, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
சரசு, இளைய மகன் கஜேந்திரன், 30, உடன், சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
மூத்த மகன் பார்த்திபன் மற்றும் கோபால் இருவரும், அருணாகுளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இருவருக்கும் மதுப்பழக்கம் உள்ளதால், அடிக்கடி குடித்துவிட்டு சண்டையிட்டு வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், பார்த்திபன் கோபாலை பலமாக தாக்கிவிட்டு, வீட்டில் உறங்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த கோபால், விறகு வெட்டும் கோடரியால், உறங்கிக் கொண்டிருந்த பார்த்திபனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து, பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், பார்த்திபன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
கோபால் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் விசாரித்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல், பார்த்திபனை கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறியுள்ளார்.
சந்தேகம் அடைந்த போலீசார், மோப்ப நாய்களை வரவழைத்து விசாரணை செய்ததில், பார்த்திபனை கொலை செய்து கோடரியை வீட்டின் பின்புறம் மறைத்து வைத்துவிட்டு, கோபால் நாடகமாடியது தெரியவந்தது.
அதன்பின், கோபாலை கைது செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.