/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாலிபர் கொலையில் ஏழு பேர் கைது
/
வாலிபர் கொலையில் ஏழு பேர் கைது
ADDED : ஜன 18, 2025 01:55 AM

மறைமலை நகர்:திருக்கச்சூர் சிங்கபெருமாள் கோவில் --- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் 16ம் தேதி அதிகாலை ரத்தகாயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இறந்தவரின் அருகில் கிடந்த யமஹா 'எப் இசட்' டூ -- வீலரின் பதிவெண் கொண்டு நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த களியப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சரவணன், 20 என்பது தெரிந்தது.
சரவணனுக்கும், சிங்கபெருமாள் கோவில்அடுத்த தெள்ளிமேடு பகுதியை சேர்ந்த பிரவீன், 26. என்பவருக்கும் கஞ்சா விற்பனை செய்த பணத்தை பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த 15ம் தேதி மாலை சரவணனை பிரவீன் மற்றும் நண்பர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
சரவணனின் திருக்கச்சூர் பகுதியில் வீசி விட்டு டூ- - வீலரை அருகில் போட்டு விட்டு விபத்தில் உயிரிழந்தது போல தோற்றத்தை ஏற்படுத்தி சென்றனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார், சிங்கபெருமாள் கோவில் அடுத்த ரெட்டிபாளையத்தை சேர்ந்த ஆகாஷ், 18. கரும்பாக்கம் பகுதியை சேர்ந்த கோகுலகண்ணன், 18. தெள்ளிமேடு பகுதியை சேர்ந்த நாகராஜ், 18. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தபரதன், 18. மற்றும் 17 வயதுடைய மூன்று சிறார்களை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரவீன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரவீன் மீது மறைமலை நகர்,கூடுவாஞ்சேரி, காயார், திருப்போரூர், செங்கல்பட்டு, ஓட்டேரி, சிவ காஞ்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை, கொலை முயற்சி, மொபைல் போன் பறிப்பு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் வழக்குகள் நிலுவையில் உள்ளன.