/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியிடம் அத்துமீறல் கடைக்காரருக்கு 'மாவுக்கட்டு'
/
சிறுமியிடம் அத்துமீறல் கடைக்காரருக்கு 'மாவுக்கட்டு'
சிறுமியிடம் அத்துமீறல் கடைக்காரருக்கு 'மாவுக்கட்டு'
சிறுமியிடம் அத்துமீறல் கடைக்காரருக்கு 'மாவுக்கட்டு'
ADDED : அக் 06, 2025 11:39 PM
சென்னை, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, வடபழனியில் மளிகை கடை நடத்தி வருபவர் இம்மானுவேல் மோசஸ், 49. சில தினங்களுக்கு முன், இவரது கடைக்கு வந்த 5 வயது சிறுமியிடம், இம்மானுவேல் மோசஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதை கண்டு, அச்சிறுமியுடன் வந்த 10 வயது சிறுமி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டனர். சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இம்மானுவேல் மோசஸை சரமாரியாக தாக்கி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் பிடியில் இருந்து இம்மானுவேல் மோசஸ் தப்ப முயன்றபோது, கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, இம்மானுவேல் மோசஸை 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.