/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
50 ஆண்டுகளாக பட்டா வழங்காததால் வருவாய் ஆய்வாளர் ஆபீசில் முற்றுகை
/
50 ஆண்டுகளாக பட்டா வழங்காததால் வருவாய் ஆய்வாளர் ஆபீசில் முற்றுகை
50 ஆண்டுகளாக பட்டா வழங்காததால் வருவாய் ஆய்வாளர் ஆபீசில் முற்றுகை
50 ஆண்டுகளாக பட்டா வழங்காததால் வருவாய் ஆய்வாளர் ஆபீசில் முற்றுகை
ADDED : மார் 18, 2025 12:34 AM

மதுராந்தகம்; மதுராந்தகம் அருகே மாமண்டூர் பகுதியில், முத்துமாரியம்மன் கோவில் தெரு, காமராஜர் நகர், வடபாதி உள்ளிட்ட பகுதிகளில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக, பட்டா வழங்க வேண்டி, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்து வந்துள்ளனர். ஆனால், தற்போது வரை கிராம மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்றும், ஒரு சிலருக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட பட்டாக்கள், வருவாய் கணக்கில் ஏற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனால், நேற்று மாமண்டூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார், மதுராந்தகம் வட்டாட்சியர் கணேசனை வரவழைத்து, முற்றுகையில் ஈடுபட்ட மக்களிடையே பேச்சு நடத்தினர்.
அரசு வழிகாட்டுதலின்படி, விரைவில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் உறுதியளித்ததை அடுத்து, முற்றுகையை கைவிட்ட மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.