/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சார் - ஆட்சியர் அலுவலகத்தில் இரவில் மது அருந்தும் மர்மநபர்கள்
/
சார் - ஆட்சியர் அலுவலகத்தில் இரவில் மது அருந்தும் மர்மநபர்கள்
சார் - ஆட்சியர் அலுவலகத்தில் இரவில் மது அருந்தும் மர்மநபர்கள்
சார் - ஆட்சியர் அலுவலகத்தில் இரவில் மது அருந்தும் மர்மநபர்கள்
ADDED : பிப் 22, 2024 10:43 PM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோவில் எதிரே, சார் - ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம், போலீசார் தங்கும் அறைகள் உள்ளிட்டவை உள்ளன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி, தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வருவோர் அமருவதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் கிரானைட் கற்கள் கொண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
சமீபகாலமாக, இரவு நேரங்களில் இங்குள்ள இருக்கைகளில் அமர்ந்து மது அருந்திவிட்டு காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகளை வீசிச் செல்கின்றனர்.
இதனால், இங்கு வரும் மக்கள் முகம் சுளித்து செல்கின்றனர். இந்த அலுவலக வளாகத்தில், இரவு நேர காவலாளிகள் இல்லாததால், 'குடி'மகன்கள் வளாகத்தில் வலம் வருகின்றனர்.
மேலும், இங்கு மது அருந்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.