sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பொது இடங்களில் கொட்டப்படும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு:ஆப்பூரில் ரூ. 6 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

/

பொது இடங்களில் கொட்டப்படும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு:ஆப்பூரில் ரூ. 6 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

பொது இடங்களில் கொட்டப்படும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு:ஆப்பூரில் ரூ. 6 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

பொது இடங்களில் கொட்டப்படும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு:ஆப்பூரில் ரூ. 6 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு


ADDED : செப் 28, 2025 12:28 AM

Google News

ADDED : செப் 28, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டம், புறநகர் பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் கொட்டப்படும் கழிவுநீர் பிரச்னைக்கு, தீர்வு காணும் வகையில், ஆப்பூரில் 6 கோடி ரூபாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் செயல்பாட்டுக்கு வரும் இத்திட்டத்தால், நீண்ட நாள் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் மறைமலை நகர், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகள், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 39 ஊராட்சிகள் உள்ளன.

இதில் சிங்கபெருமாள் கோவில், வீராபுரம், கொளத்துார், செட்டிபுண்ணியம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் நாளுக்கு நாள் தொழிற்சாலைகள், வணிக கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் அதிகரித்து வருகின்றன.

புகார் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தோர் புதிதாக வீடு கட்டி குடியேறி வருகின்றனர். இந்த நகராட்சி கள் மற்றும் 15 ஊராட்சி களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தனியார் டேங்கர் லாரிகள் வாயிலாக ஒரு முறை எடுக்க 4,000 ரூபாய் உரிமையாளர்களிடம் வசூலிக்கப் பட்டது வருகிறது.

இவ்வாறு எடுக்கப்படும் கழிவுநீர் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி பகுதிகளை சுற்றியுள்ள காப்பு காடுகள், நெடுஞ்சாலை ஓரங்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டு மனைப்பிரிவுகள் மற்றும் நீர்நிலைகளில் நேரடியாக விடப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, தொடர்ந்து சுற்று சூழல் மாசு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மாவட்ட நிர் வாகத்திற்கு புகார் அளித்து வருகின்றனர்.

இதையடுத்து, காட்டாங் கொளத்துார் ஒன்றியத்தில், தேசிய கிராம நகரத்திட்டத்தின் வாயிலாக 6 கோடி ரூபாய் மதிப்பில் ஆப்பூர் ஊராட்சி, தாலிமங்கலம் கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இரண்டு யூனிட்களாக அமைக்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீரை பல்வேறு நிலைகளில் சுத்திகரித்து நன்னீராக மாற்றி இதே பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் நடப் பட்டுள்ள மரங்களுக்கு விடப்பட உள்ளது.

தனியார் கழிவுநீர் லாரி தினமும் 20 ஆயிரம் கிலோ லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் உள்ள கசடுகள் இயற்கை உரமாக தயாரித்து, விவசாயிகளுக்கும், மாடித்தோட்டம் பயிரிடுவோருக்கும் வழங்கப்பட உள்ளது.

சுத்திகரிப்பு நிலைய பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 15 ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி செயலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் நல பணியாளர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மறைமலைநகர், பாலுார், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட தனியார் கழிவு நீர் டேங்கர் லாரிகள் உள்ளன.

நடவடிக்கை இதன் உரிமையாளர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாகவும் அல்லது குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாக உள்ளாட்சி அமைப்பு கள் மற்றும் போலீசார் பொது வெளியில் கழிவுநீர் ஊற்று வோர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து மறை மலைநகர் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கழிவுநீரை அகற்றும் டேங்கர் லாரிகளுக்கு நகராட்சி வாயிலாக தனியாக உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.

திறந்த வெளியில் கழிவு நீர் ஊற்றும் வாகனங்கள் முதல் முறை 25,௦௦௦ ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை 50,௦௦௦ ரூபாய் அபராதமும் தொடர்ந்து அதே வாகனம் பிடிபட்டால் வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது செங்கல்பட்டு பழவேலி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலை யத்தில் டேங்கர் லாரிகள் வாயிலாக கொண்டு செல்லப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய செங்கல்பட்டு நகராட்சியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.

இருப்பினும் லாரி ஓட்டுநர்கள் பெட்ரோல் செலவு, டோல்கேட் செலவு போன்றவற்றை தவிர்க்க பொது வெளியில் ஊற்றி வந்தனர்.பிடிபடும் வாகனங்களுக்கு உரிய அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒப்பந்தம் இதுகுறித்து ஊரக வளர்ச்சி அதிகாரிகள் கூறியதாவது:

ஆப்பூர் ஊராட்சியை சுற்றியுள்ள 15 ஊராட்சி களில் இருந்து எடுக்கப்படும் கழிவுகள் இங்கு சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது. தனியார் டேங்கர் லாரி உரிமையா ளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு டேங்கர் லாரிக்கு குறிப்பிட்ட தொகை மட்டும் வசூலிக்கப்பட்ட உள்ளது.

மறைமலை நகர் கூடுவாஞ்சேரி ஆகிய இரண்டு நகராட்சிகளிடம் ஒப்பந்தம் போடப்பட்டு அந்த பகுதியில் இருந்து கழிவு நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் இந்த சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரட்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.






      Dinamalar
      Follow us