/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்பிரே தெளித்து பெண்ணை மயக்கி கொள்ளை
/
ஸ்பிரே தெளித்து பெண்ணை மயக்கி கொள்ளை
ADDED : அக் 22, 2024 08:35 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூரைச் சேர்ந்தவர் மங்கையர்க்கரசி, 40. அதே ஊரில் உள்ள பெற்றோர் வீட்டில், தற்போது உள்ளார். நேற்று முன்தினம், தந்தை செல்வத்துடன், திருக்கழுக்குன்றம் இந்தியன் வங்கியில், 70,000 பணம் பெற்று வீடு திரும்பினார்.
பிற்பகல் 2:00 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர், அவர் மீது மயக்க ஸ்பிரே தெளித்தார். அதில் மங்கையர்க்கரசி மயங்கியதும், மர்மநபர் பீரோவில் வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில், செல்வம் புகார் அளித்தார். மூன்றரை சவரன் நகை கொள்ளை போனதாக, புகார் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.