/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்.ஆர்.எம்., கல்லுாரி பட்டமளிப்பு
/
எஸ்.ஆர்.எம்., கல்லுாரி பட்டமளிப்பு
ADDED : செப் 25, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 27ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று முன்தினம் மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் வாசுதேவராஜ் தலைமை தாங்கினார். தாளாளர் ஹரிணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் அம்பலவாணன் பங்கேற்று சிறப்புறையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், 750 மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. துணை முதல்வர் மதியழகன் நன்றியுரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவ - மாணவியர், பெற்றோர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.