/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் வரத்து துவக்கம்
/
வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் வரத்து துவக்கம்
ADDED : அக் 18, 2024 01:18 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு, தற்போது பர்மா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பறவைகள் வந்தவண்ணம் உள்ளன.
நத்தை கொத்திநாரை, பாம்பு தாரா, சாம்பல் நாரை, நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, கூழைக்கடா உள்ளிட்ட, 2,000க்கும் மேற்பட்ட பறவைகள் தற்போது தங்கியுள்ளன.
குறிப்பாக, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வலசை வர துவங்குகின்றன. அக்டோபர் மாதத்தின் துவக்கத்தில், 400க்கும் குறைவான பறவைகளே இருந்தன.
தற்போது, கடந்த சில நாட்களாக, பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, 2,000 பறவைகள் வந்துள்ளன. வரும் நாட்களில், வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.