/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில பூப்பந்தாட்ட போட்டி செங்கை சிறார்கள் தேர்வு
/
மாநில பூப்பந்தாட்ட போட்டி செங்கை சிறார்கள் தேர்வு
ADDED : ஜூலை 22, 2025 12:20 AM
மாமல்லபுரம், மாநில பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க, செங்கல்பட்டு மாவட்ட சிறார் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் சார்பில், மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி, அடுத்த மாதம் மதுரையில் நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டம் சார்பில் விளையாட உள்ள வீரர்களை தேர்வு செய்ய, மாவட்டந்தோறும் தற்போது போட்டிகள் நடத்தப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்ட பூப்பந்தாட்ட கழகம், மாமல்லபுரம் பல்லவர்கள் பூப்பந்தாட்டக் குழு ஆகியவை இணைந்து, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், மாநில போட்டியில் பங்கேற்க உள்ள, 15 வயதிற்கு உட்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் இளம் சிறார் பட்டய போட்டியை, மாமல்லபுரத்தில் நடத்தின.
ஆண்கள் 10, பெண்கள் ஐந்து என, 15 அணிகளைச் சேர்ந்த 150 பேர் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள் என, தலா 10 பேர் வென்று, மாநில போட்டியில் பங்கேற்கின்றனர்.