/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெரு மின்விளக்குகள் பழுது கத்திரிச்சேரி கிராமத்தில் அவதி
/
தெரு மின்விளக்குகள் பழுது கத்திரிச்சேரி கிராமத்தில் அவதி
தெரு மின்விளக்குகள் பழுது கத்திரிச்சேரி கிராமத்தில் அவதி
தெரு மின்விளக்குகள் பழுது கத்திரிச்சேரி கிராமத்தில் அவதி
ADDED : செப் 01, 2025 01:56 AM

மதுராந்தகம்:கத்திரிச்சேரி கிராமத்தில், பழுதடைந்துள்ள மின் விளக்குகளை மாற்றி அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ஒன்றியம், கத்திரிச்சேரி கிராமத்தில், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, பிள்ளையார் கோவில் தெரு பகுதியில், கடந்த சில மாதங்களாக மின்விளக்கு பழுதடைந்து உள்ளது.
மேலும், பராமரிப்பின்றி மின் கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்து உள்ளன.
புதிதாக தெரு மின்விளக்கு அமைக்க கோரி, ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலரிடம் பலமுறை கிராமத்தினர் புகார் தெரிவித்தும், இதுவரை சரிசெய்து தரப்படவில்லை.
ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, சபாநாயகம் என்பவர் கூறியதாவது:
கத்திரிச்சேரி பகுதியில், தெரு மின்விளக்குகள் பழுது காரணமாக எரிவதில்லை.
வெளியூர் பகுதிக்கு வேலைக்குச் சென்று வரும் இந்த கிராம மக்கள், இரவில் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
ஊராட்சி நிர்வாகம் கவனித்து, பழுது ஏற்பட்டுள்ள மின்விளக்குகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.