/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு அலுவலக கட்டடத்தில் கழிப்பறை இல்லாததால் அவதி
/
அரசு அலுவலக கட்டடத்தில் கழிப்பறை இல்லாததால் அவதி
ADDED : பிப் 22, 2024 10:36 PM

திருப்போரூர், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கட்டப்பட்டது.
இதில், தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் மூலம், கிராம ஊராட்சிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், திறன்வளர் பயிற்சி அளித்தல், கூட்டமைப்பு குழு மூலம் ஒருங்கிணைத்தல், வங்கி மூலம் கடனுதவி பெற்று தருதல், வறுமை ஒழிப்பு சங்கம் உருவாக்கி பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளிலிருந்து, மகளிர் குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்திற்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளுக்கு வருகின்றனர்.
ஆனால், இந்த அலுவலகத்தில் கழிப்பறை வசதி அமைக்கப்படவில்லை. இதனால், அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் உட்பட பயிற்சிக்கு வரும் பெண்கள் என, அனைவரும் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து, அருகே உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, பெண்களின் நலன் கருதி, இந்த அலுவலகத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.