/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவிலுக்கு செல்லும் பாதையில் வழிந்தோடும் கழிவு நீரால் அவதி
/
கோவிலுக்கு செல்லும் பாதையில் வழிந்தோடும் கழிவு நீரால் அவதி
கோவிலுக்கு செல்லும் பாதையில் வழிந்தோடும் கழிவு நீரால் அவதி
கோவிலுக்கு செல்லும் பாதையில் வழிந்தோடும் கழிவு நீரால் அவதி
ADDED : நவ 20, 2024 01:16 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், வங்கிகள் உள்ளிட்டவை உள்ளன.
சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, தினமும் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு, அனுமந்தபுரம் சாலையில் பழமையான பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் வழியான அனுமந்தபுரம் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பு, மண்டபத் தெரு சந்திப்புகளில், சாலையில் கழிவு நீர் தேங்கி வழிந்து ஓடுகிறது.
இதன் காரணமாக, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது, கழிவு நீரில் கால் வைத்து மிதித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது கனரக வாகனங்கள் கழிவுநீரை வாரி இறைத்து செல்கின்றன. தொடர்ந்து கழிவு நீர் தேங்குவதால், இந்த பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.
வரும் 28ம் தேதி, பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலுக்கு அருகில் வழிந்து ஓடும் கழிவுநீரை, ஊராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
எனவே, கோவில் செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ள கழிவு நீர் பிரச்னைக்கு, உரிய தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.