/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு நிழற்குடை கட்டுமான பணி துரிதம்
/
சூணாம்பேடு நிழற்குடை கட்டுமான பணி துரிதம்
ADDED : பிப் 13, 2024 04:12 AM

சூணாம்பேடு : சூணாம்பேடு பஜார் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. மணப்பாக்கம், வில்லிப்பாக்கம், புதுப்பட்டு, தாங்கல் போன்ற 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்த பழைய நிழற்குடை சேதமடைந்ததால், கடந்த ஆண்டு பிப்., 21ம் தேதி, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
கடந்த 10 மாதங்களாக அடித்தளம் மட்டும் அமைக்கப்பட்டு, பணிகள் ஆமை வேகத்தில் நடந்தன. அதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, நம் நாளிதழில், கடந்த 28ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, முழுவீச்சில் நடந்து வருகின்றன.
சில நாட்களில் கட்டுமானப் பணிகள் முழுதும் முடிந்து, பயணியர் நிழற்குடை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.