/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளுக்கு 'முட்டு'
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளுக்கு 'முட்டு'
ADDED : பிப் 03, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த சின்ன பூண்டி கிராமத்தில், விளை நிலங்கள் மற்றும் அதன் அருகே குடியிருப்பு வீடுகள் உள்ளன.
இங்கு விளை நிலங்கள் குறுக்கே மின் வழித்தடம் செல்கிறது. இந்த மின்வழித்தடம் தாழ்வாக செல்வதால், விவசாயிகளுக்கு இடையூறாக உள்ளது.
இதனால் விவசாயிகள் அச்சமடைந்து , கம்புகள் வாயிலாக முட்டு கொடுத்து, மின்கம்பியை துாக்கி கட்டியுள்ளனர். பலத்த காற்று அடிக்கும் போது, கம்புகள் சரிந்து, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, விளை நிலங்களின் மீது தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க, மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

